Posts

Showing posts from November, 2023

ootam yatria tholu uram

Image
  ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தொழுவுரத்தை ஊட்டமேற்றி பயன்படுத்துவதால் செலவு குறையும் நுண்ணுயிர்கள் அதிகரிக்கும். பயிருக்கு தேவையான  தழை, மணி, சாம்பல் சத்துக்களும், நுண்ணூட்ட சத்துக்களும் கிடைக்கும்.  ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை முதலில் ஒரு மேடான மர நிழல் உள்ள பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.   மக்கிய தொழுவுரத்தை நன்றாக கிளறி தண்ணீர் தெளித்து  நிழலில் ஆறவிடவும். அவற்றில் கட்டிகள், கல், தூசி முதலியவை இல்லாமல் நன்றாக நொறுக்கி விடவும்.  நமது தேவைக்கு ஏற்ப கீழே குழு-1 முதல் குழு-4 வரை கூறிய பொருட்களை தொழுவரத்தில் கலந்து  எல்லாவற்றையும் நன்கு கலக்கி விடவேண்டும். தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து மண்வெட்டியால் நன்றாக பிரட்டிவிட வேண்டும். கையில் பிடித்து  பார்த்தால் உருண்டையாக உருட்டும் அளவிற்கு இருக்க வேண்டும். பிறகு அவற்றில் தென்னை ஓலை அல்லது ஈரமான சணல் பைகள் அல்லது கரும்பு இலை கொண்டு மூடி நிழலில் ஒரு மாதம் வரை வைத்திருந்து பயிருக்கு பயன்படுத்தலாம். தேவையான சமயத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து சீரான ஈரப்பதம் பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் ...