Posts

Showing posts from March, 2019

Fish Farming - Tamil

Image
மீன் வேளாண்மை ( வளம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை ) எங்கள்   வலைப்பதிவுக்கு   வரவேற்கிறோம் ... கூட்டின மீன்வளர்ப்பு குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம். கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில் உள்ள மூன்று நீர்மட்டங்களான மேல், நடு மற்றும் அடி மட்டத்தில் உள்ள உணவு வீணாகாமல் உபயோகப்படுத்துவதன் மூலம் குளத்தின் உற்பத்தித்திறன் பெருகுகின்றது. இந்த முறையில் இந்தியப் பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிரிகால், மற்றும் அயல்நாட்டுக் கெண்டைகளான சாதாக்கெண்டை, புல்கெண்டை,  மற்றும் வெள்ளிக்கெண்டை ஆகியவை ஒருங்கிணைத்து வளர்க்கப்படுகின்றன. இவைகளுடன் சில சமயங்களில் நன்னீர் இறாலும் சேர்த்து வளர்க்கப்படுகிறது. இவற்றுள் கட்லாவும், வெள்ளிக்கெண்டையும் முறையே நீரின் மேல்மட்டத்தில்