Fish Farming - Tamil
மீன் வேளாண்மை
(வளம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை)
எங்கள் வலைப்பதிவுக்கு வரவேற்கிறோம்...
கூட்டின மீன்வளர்ப்பு குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம்.
கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில் உள்ள மூன்று நீர்மட்டங்களான மேல், நடு மற்றும் அடி மட்டத்தில் உள்ள உணவு வீணாகாமல் உபயோகப்படுத்துவதன் மூலம் குளத்தின் உற்பத்தித்திறன் பெருகுகின்றது. இந்த முறையில் இந்தியப் பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிரிகால், மற்றும் அயல்நாட்டுக் கெண்டைகளான சாதாக்கெண்டை, புல்கெண்டை, மற்றும் வெள்ளிக்கெண்டை ஆகியவை ஒருங்கிணைத்து வளர்க்கப்படுகின்றன. இவைகளுடன் சில சமயங்களில் நன்னீர் இறாலும் சேர்த்து வளர்க்கப்படுகிறது. இவற்றுள் கட்லாவும், வெள்ளிக்கெண்டையும் முறையே நீரின் மேல்மட்டத்தில் உள்ள விலங்கின மற்றும் தாவர மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்கின்றன. ரோகு, நீரின் நடுமட்டத்தில் உள்ள தாவர, விலங்கின நுண்ணுயிரிகளை உண்கிறது. குளத்தின் அடிமட்டத்தில் அல்லது மண்ணில் புதைந்துள்ள உணவுகளை மிரிகாலும் சாதாக்கெண்டையும் உண்டு வளரும். புல்கெண்டை, குளக்கரையோரங்களில் காணப்படும் புற்களையும், இலைகளையும் உண்டு வளர்கிறது.
மீன் பண்ணைக்கான நிலம் தேர்வு செய்தல்
மீன் குளத்திற்கான பகுதி அடையாளம் காணப்பட்டு, ஜேசிபி (JCB) மற்றும் டிராக்டர்களின் உதவியுடன் 30 செண்ட்ல் தொடங்கப்பட்டது.
மீன் பண்ணைக்கான நிலம் தேர்வு செய்தல்
மண்ணில் களிமண் ஆழம் பரிசோதிக்கப்பட்டது.
குளங்கள் அமைக்கப்பட வேண்டிய நிலம் அடையாளம் காணப்பட்டது .
நிலம் சுத்தப்படுத்தல்
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நிலத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது.
குளம் கட்டுமானம்
குளம் வெட்டப்பட வேண்டிய பகுதி அளவீடு செய்யப்பட்டது.
குழாய் பதித்து, முதலில் அரை அடி அளவுக்கு நீர் நிரப்பபட்டது.
பின்பு தினமும் நீரின் அளவு அதிர்க்கப்பட்டு 4 முதல் 5 அடி வரை உயர்த்தப்பட்டது.
குளத்தின் நீரை வளப்படுத்துதல்
பொதுவாக ஒரு குளத்தில் / நீர் நிலையில் மீன் வளர்த்தலின் பொருட்டு மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன்பாக மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நீர் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளையும் சரிவர மேற்கொள்ள வேண்டும்.பாசி உருவாக்க இயற்கை உரமான ஆடு மற்றும் மாட்டு சாணம் பயன்படுத்தபட்டது. பாசி மீன்களுக்கு நல்ல உணவாக அமையும்.
zooplankton(heterotrophic plankton that range from microscopic organisms to large species) and phytoplankton (microscopic marine algae). which is good for food chain.
குளம் கரும்பச்சை நிறமாகும் வரை இயற்கை உரம் அதிகப்படுத்தபட்டது.
தண்ணீர் வெளிப்படை தன்மையை அளவிடுவதற்கு செச்சி வட்டு (Secchi Disk) பயன்படுத்தபட்டது.
மீன் வளர்ப்புக்கு ஏற்ற (PH) அளவு சராசரியக 6.5 முதல் 9.0 வரை இருக்க வேண்டும்.
நர்சரி குளம்
கொள்முதல்
அதன்பின்னர் குளத்து நீரின் மேல்மட்டம், நடுமட்டம் மற்றும் அடிமட்டத்திலுள்ள உணவுகளை உண்ணும் கெண்டை ரகக் குஞ்சுகளை முறையே 40:20:40 என்ற விகித்தில் இருப்பு செய்ய வேண்டும்.
மீன் குஞ்சுகள் வாங்கப்பட்டன. ( புல் கெண்டை, சதா கெண்டை , கண்ணாடி கெண்டை).கட்லா, ரோகு, மிரிகால் வகை மீன்கள் கிடைக்கவில்லை.
குளத்தில் மீன் உணவிற்காக தட்டுகள் பொருத்தப்பட்டு. தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் அன்றாடம் மீனின் உத்தேச எடைக்கு 2 – 3% என அளிக்கப்படுகிறது.
அசோலா மற்றும் கீரை வகைகளும் மீன் உணவிற்காக வளர்க்கப்படுகிறது.
அசோலா மற்றும் கீரை உடன் சேர்த்து கடலை புண்ணாக்கு, அரிசி மற்றும் அரிசி தவிடும் மீனுக்கு உணவாக கொடுக்கபட்டது.
தவிடு, புண்ணாக்குடன் மீன்தூளையோ அல்லது சோயாமாவையோ ஒரு பங்காகச் சேர்த்துப் பயன்படுத்தினால் மீன்களின் வளர்ச்சித்திறன் மேலும் அதிகரிக்கும்.
கீரை - (மீனுக்கு அளிப்பதற்கு முன்)
கீரை - (மீன் உண்ட பிறகு)
அளவிற்கு அதிகமாக உணவிடக்கூடாது. புல்கெண்டை மீனுக்கு வேலம்பாசி, ஹைடிரில்லா மற்றும் இளம்புற்களையும், தீவனப் புற்களான குதிரை மசால், கினியாப்புல், நேப்பியர்புல் என்பவைகளையும் சிறிது சிறிதாக வெட்டி மூங்கில் பரணில் வைத்து மிதக்கச்செய்து சிறப்பு உணவாக அளிக்க வேண்டும்.
மீன் பராமரிப்பு
இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் வேகமாக வளர, வளர்ப்புக் குளங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். வளர்ப்புகுளத்தின் நீர் மட்டம் எப்போதும் ஒரு மீட்டர் ஆழத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளத்திலுள்ள நாள்பட்ட பழைய நீரை 10% அளவிற்கு வெளியேற்றி, புதுநீரைப்பாய்ச்ச வேண்டும். இரவில் நீரில் சுழல் சக்கரங்களைப் பயன்டுத்தும் வசதிகளைக் கொண்ட குளங்களில் இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக தேவையில்லை.
மீன்களின் எடையை தொடர்ந்து சோதித்து பார்த்து அதன்படி உணவு அளிக்கப்படுகிறது.
கண்ணாடி கெண்டை / வெள்ளி கெண்டை
புல் கெண்டை
சாதா கெண்டை
இரைபிடித்துண்ணி (PREDATORS)
மீன் கொத்தி பறவைகள் மற்றும் பாம்புகள் தான் மீன்களின் முதல் எதிரிகள்.
பறவைகளிடம் இருந்து மீன்களை பாதுகாக்க குளத்தின் மேல் பரப்பில் கம்பி கட்ட பட்டு உள்ளது.
மீன் அறுவடை
ஆறு மாதத்திற்கு பிறகு மீன்கள் விற்பனைக்காக பிடிக்கபட்டது.
மீன் வளர்ப்பதினால் ஏற்படும் மற்ற நன்மைகள்
1. நெல் வயலின் நீர் பாசனத்திற்கு, மீன் குளத்தின் நீர் பயன்படுத்தபட்டது. இது நெல் வயலுக்கு ஒரு நல்ல இயற்கை உரமாகும்.
2. வாத்து-மீன் வளர்ப்பு என்பது ஒருங்கிணைந்த பண்ணை முறையாகும் . வாத்துகளின் கழிவுகள் மீன் வளர்சிக்கு உதவுகிறது. அவை இயற்கையாக காற்று சுழற்சி செய்பவை மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதில் உதவுகின்றன. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாத்துகளுடன் வளர்ப்பதற்கு 10 செ.மீ அளவிற்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் வாத்துகள் மீன் குஞ்சுகளை விழுங்கிவிடக்கூடும்.
வாத்து தேவையற்ற (களை) மீன்களை உண்டு , நாம் விட்ட மீன்கள் வளர உதவி புரிகின்றன.
3. முருங்கை மரம், பப்பாளி மரம், அரை நெல்லிக்காய் மரம், கொய்யா மரம், மாதுளை செடி, தென்னை மரம், சீதா மரம், தேக்கு மரம், அகத்தி மரம், புளிச்சை கீரை போன்ற பல மரங்கள் குளக்கரையில் வளர்க்கபடுகிறது.
ஆய்வு
ஆய்வுக்காக 100 திலாப்பியா மற்றும் 100 ஏறி வவ்வால் மீன்கள் வாங்கப்பட்டன.
திலாப்பியா வகை
ஏறி வவ்வால் வகை
Excellent.
ReplyDeleteEverything in order.
Awesome job, keep up the good work!!!
ReplyDelete
ReplyDeleteयह एक अद्भुत और रोचक ब्लॉग है जो प्राकृतिक खेती के बारे में जानकारी और ज्ञान बढ़ाने में मदद करता है।
https://www.merikheti.com/prakritik-kheti-ya-natural-farming-me-jal-jungle-jameen-sang-insaan-ki-sehat-se-jude-hain-raaj/